டெல்லி: ஜியோவின் புதிய படைப்பாக ‘ஜியோமார்ட்’ சேவையை 200 நகரங்களில் தொடங்கியுள்ளது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.
பெருநகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களிலும், சிறு நகரங்களான மைசூரு, பாடிண்டா, டெஹ்ராடூன் ஆகிய இடங்களிலும் தங்களின் சேவை இருக்குமென நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வருகிறது ஜியோமார்ட்!
இந்த சேவையானது, சந்தையில் ஏற்கனவே களமாடிவரும் குரோஃபர்ஸ், பிக்பாஸ்கட், நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.