உலகில் சியோமி நிறுவனத்தை அறியாதோர் யாருமே இருக்க முடியாது. கைபேசி துறை மட்டுமின்றி பல்வேறு துறையில் எம்.ஐ, ரெட்மி பிராண்ட், தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு தற்போதையை ட்ரெண்டிற்கு ஏற்றபடி அப்டேட்களை வழங்கி வருகின்றனர். அதன்படி, சீனாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 10X, வரும் மே 29ஆம் தேதி அறிமுகமாகிறது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரவுள்ளன. குறிப்பாக பயோனியர் எடிஷன் செல்போனில் 5ஜி சப்போர்ட் இணைக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 10X ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
- 6.57 இன்ச் OLED டிஸ்பிளே
- இன்- டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
- 8 ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு 10
- 48 எம்பி கேமரா உட்பட நான்கு பின்புற கேமராக்கள்
- 128 ஜிபி ஸ்டோரேஜ்
ரெட்மி 10X ஸ்மார்ட்போன் விலை குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த மொபைல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனது புதிய MIUI 12 பயனர் இயங்கு தளத்தை வெளியிட்டது சியோமி!