பஞ்சாப் நேஷனல் வங்கியின் 2019ஆம் நிதியாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 2,617 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதே ரிசர்வ வங்கியால் மதிப்பிடப்பட்ட வாராக்கடன் விகிதமும், 2617 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் நிகர இழப்பு 2019ஆம் நிதியாண்டில் 11,335.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி அறிவித்துள்ளது. இதே ரிசர்வ் வங்கி 9,975 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கும் என்றும் கூறியிருந்தது.
மருத்துவக் காப்பீட்டு கொள்கையில் பயன்தரும் புதிய விதிகள்: அறிந்து கொள்ளுங்கள்!
அந்த வகையில் இந்த வங்கியின் மொத்த வாராக்கடனின் மதிப்பானது 78,472.70 கோடி ரூபாய் என இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி 81,089.70 கோடி ரூபாய் வாராக்கடன் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இந்த வங்கியின் நிகர வாரக்கடன் மதிப்பானது 30,037.66 கோடி ரூபாய் என இவ்வங்கி அறிவித்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி இதற்கு மாறாக 32,654.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
மூன்றே நாளில் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம் - டிராய் அதிரடி!
இருப்பினும் இவ்வங்கி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 507 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. இருப்பினும் இதற்கு முந்தைய ஆண்டு இதே இரண்டாவது காலாண்டில் 4,532.35 கோடி ரூபாய் இழப்பினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் செப்டம்பர் முந்தைய காலாண்டில் நிகர வட்டி வருவாய் 7.2 விழுக்காடு அதிகரித்து, 4,262 கோடி ரூபாயை அதிகரித்துள்ளது.
ஆப்பிள் கணினியின் விலையா இது? இதுக்கு பென்ஸ் கார் விலையே தேவல!
இது முந்தைய ஆண்டில் 3,974 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பு 16.76 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டில் 16.49 விழுக்காடாக இருந்துள்ளது.
கண்ணில் நீர் வழிய.... நெஞ்சில் காயம் ஏற்படுத்திய வெங்காயம்!
முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 17.16 விழுக்காடாக இருந்துள்ளது. இவ்வங்கியின் வாராக்கடனின் விகிதம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த விகிதமானது இன்னும் பெரிய அளவிலான வீழ்ச்சியை காட்டுகிறது.