ETV Bharat / business

கார்டு ஸ்வைப்பிங் மெஷினாக மாறும் ஸ்மார்ட்போன்கள்: பேடிஎம் அசத்தல்! - கடையில் கார்ட் ஸ்கேன்

கடைக்காரரின் ஸ்மார்ட்போனை கார்டு ஸ்வைப்பிங் மெஷினாக மாற்றும் வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Soundbox 2.0
பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் 2.0
author img

By

Published : Mar 10, 2021, 9:44 PM IST

இன்றைய உலகில் கடைக்குச் சென்றதும் நமக்கு தேவையான பொருள் இருக்கா என்று கேட்பதைவிட கூகுள் பே, போன்பே, பேடிஎம் இருக்கின்றனவா என்றுதான் முதலில் கேட்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகளவில் மேற்கொள்கின்றனர்.

சிறிய தொகையான 10 ரூபாயும் ஆன்லைனில்தான் அனுப்பப்பட்டுவருகிறது. இதைக் கருத்தில்கொண்டு பலவிதமான அப்டேட்களை வழங்கி, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் களமிறங்கியுள்ளன.

அந்த வகையில், பேடிஎம் செயலி, வாடிக்கையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த டெபிட் கார்ட் மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம்செய்துள்ளது. இது நிச்சயம் தொழில் வணிகர்களுக்கு உதவியாக அமைந்திடும். கான்டாக்ட்லெஸ் பரிவர்த்தனையின் அடுத்தக்கட்டம் என்றே இதைச் சொல்லலாம்.

பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் 2.0 சிறப்பு அம்சங்கள்

டெபிட் கார்ட் மூலம் பணம் அனுப்பும் வழிமுறை:

முதலில் கடைக்காரர்கள் paytm for business appஇல் பதிவுசெய்ய வேண்டும். பின்னர், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள paytm smart pos செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதைச் செய்தாலே, டெபிட் கார்ட் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகப் பணம் அனுப்பிட முடியும்.

வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை, கடைக்காரரின் ஸ்மார்ட்போனுக்குப் பின்னால் வைத்ததும் ஸ்கேன் செய்யப்பட்டு பரிவர்த்தனைக்கான முறை தொடங்கிவிடும்.

இந்தப் பரிவர்த்தனை NFC தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெறுகிறது. கார்ட் ஸ்மார்ட்போனுக்குப் பின்னால் வைக்கப்பட்டதுமே, கடைக்காரரின் செல்போனின் தொகையைக் குறிப்பிடும் திரை வந்துவிடுகிறது.

கார்டில் வைஃபை வசதி

இதற்கு வாடிக்கையாளர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் வைஃபை வசதி இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போது மட்டுமே, இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சில கார்டுகளில் மட்டுமே வைஃபை வசதி இடம்பெற்றுள்ளது, இந்த அப்டேட்டிற்குப் பின்னடைவாக அமையலாம்.

இதுமட்டுமின்றி, பேடிஎம் நிறுவனம் தொழில் வணிகர்களுக்காக 'பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் 2.0' சாதனத்தை அறிமுகம்செய்துள்ளது. கூடுதல் சிறப்பு அம்சங்கள், கடைக்காரர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Smart POS IoT
பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் 2.0

பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் 2.0 சிறப்பு அம்சங்கள்:

  • வாடிக்கையாளர் பணம் அனுப்பியதும், அந்தத் தொகை சாதனத்தில் தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
  • புதிதாக பங்க்ஷன் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு நாளில் நடைபெற்ற மொத்த பரிவர்த்தனையின் தகவல்களைப் பெற்றிட முடியும். இது தொகைகளைக் கணக்கிட உபயோகமாக அமைந்திடும்.
  • இந்தச் சாதனம் சாலையோரக் கடைகள், நடுத்தர முதல் பெரிய சில்லறை விற்பனையாளர்கள் வரை தொடங்கி அனைத்துப் பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் பராமரிக்க உதவுகிறது.
  • ஒவ்வொரு தொகை பெறுதலும், வாய்ஸ் மூலமே கேட்டுக்கொள்ள முடியும்.
  • இதில் 2000 mAh பேட்டரி உள்ளது. கருவியில் சார்ஜ் எவ்வளவு உள்ளது என்பது தெரிந்துகொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது. பேட்டரி இன்டிகேட்டரின் நிறம் மாறுவது மட்டுமின்றி ஒலி மூலம் எச்சரிக்கும் அம்சமும் உள்ளது.
  • இதில் சிம் கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதால், வைஃபை இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
  • ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகள் உள்ளன. வரும் காலத்தில், கூடுதல் மொழிகளை இணைத்திடத் திட்டமிட்டுள்ளனர்.

இதில் Paytm All-in-QR பொருத்தப்பட்டுள்ளதால், கடைக்காரர்கள் பூஜ்ஜிய சதவீத கட்டணத்தில் வரம்பற்ற தொகைகளை நேரடியாக வங்கிக் கணக்கில் ஏற்க உதவுகிறது.

இதையும் படிங்க: கூகுள் டிவியில் 'கிட்ஸ் கன்ட்ரோல்' வசதி அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.