ஓப்போ நிறுவனம் கைப்பேசி துறையில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக டிஸ்ப்ளேவில் கேமரா வைத்து வெளியாக இருக்கிறது என்ற தகவல் இணையதளத்தில் பரவிக் கொண்டு இருந்தது.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக சினா கைப்பேசி நிறுவனம் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் ஓப்போ நிறுவனத்தின் சுற்றும் திறன் கொண்ட முன் கேமரா,வாட்டர் டிராப் நாட்ச், ஓப்போ ஃபைண்ட் எக்ஸில் பாப்-அப் கேமரா அமைப்பு, டிஸ்ப்ளேவில் முன் கேமரா என உள்ளிட்ட பல்வேறு கைப்பேசி மாதிரிகளின் புகைப்படங்களை வெளியிட்டது.
ஓப்போவின் முக்கிய கைப்பேசியான டிஸ்ப்ளேவில் முன் கேமராவின் கைபேசியின் ஒலியை கட்டுப்படுத்தும் பட்டன்கள் கைப்பேசியின் இடது பக்கத்திலும், பவர் பட்டனை வலது பக்கத்திலும் வைப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமான முன் கேமரா செல்ஃபிகள் எடுக்கும்போது முன் கேமரா சுற்றி ஒளிரும் வளையம் காட்சியளிக்கப்படும்.
ஓப்போ நிறுவனம் இன்று ஷாங்காயில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் டிஸ்ப்ளேவில் முன் கேமரா கைப்பேசியை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது.
மேலும் இதே முயற்சியில் சியோமி, ஹானர் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.