டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூலதனத்தை தாண்டி டிசிஎஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெற்றதால், 2020ஆம் ஆண்டை போலவே மதிப்புமிக்க நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இன்றைய பகல்நேர வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தையில் (பிஎஸ்இ), டி.சி.எஸ் சந்தை மதிப்பு ரூ. 12 லட்சத்து 45 ஆயிரத்து 341.44 கோடியாக இருந்தது. இதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) மதிப்பு ரூ.12 லட்சத்து 42 ஆயிரத்து 593 கோடியாக இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.84% விழுக்காடு சரிவைக் கண்டு ரூ.1950.30ஆக இருந்தது. இதே வேளையில் டிசிஎஸ் பங்கின் விலை 1.26% விழுக்காடு உயர்வைக் கண்டு, ரூ. 3,345.25ஆக ஆண்டின் உச்ச விலையை எட்டிப்பிடித்தது.
2020ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் இதேபோல டிசிஎஸ், உள்நாட்டின் பெரும் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.