ETV Bharat / business

11 இலக்க அலைபேசி எண்களுக்கு வாய்ப்பில்லை: டிராய் - Not recommended 11 digit mobile numbering plan: TRAI

10 இலக்க எண்களிலேயே அலைவரிசைகளின் தொடர்பு எண்கள் தொடரும் என டிராய் தெரிவித்துள்ளது. மேலும், 11 இலக்க எண்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் எண்ணம் தற்போதில்லை என்றும் கூறியுள்ளது.

no 11 digit number plan trai
no 11 digit number plan trai
author img

By

Published : Jun 1, 2020, 2:31 AM IST

டெல்லி: 11 இலக்க அலைபேசி எண்களை பரிந்துரைக்கவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய் விளக்கமளித்துள்ளது. ஆனால், தரைவழி தொலைபேசியிலிருந்து அழைக்கும்போது '0' என்ற எண்ணை சேர்க்கும்படி பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் தகவல் தொடர்பு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் இணையத்தை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் 11 இலக்க அலைபேசி எண்களை, அனைவருக்கும் வழங்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய் பரிந்துரை செய்திருந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.

இதன் மூலம் இன்னும் அதிகமான மக்களுக்கு எண்கள் ஒதுக்க வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வேளையில் அலைபேசி எண்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்கள் முறையே தொடரும் என டிராய் விளக்கமளித்துள்ளது.

அலைபேசிகளுக்கு 11 இலக்க முறையைப் பரிந்துரைக்கவில்லை என்றும், அறிக்கைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், தரை வழியிலிருந்து, அலைபேசிகளைத் தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் ‘0’ பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இதனை வைத்து 11 இலக்க எண்களாக மாறும் எனத் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியுள்ளது.

10 இலக்க எண்களுக்கு முன் ‘0’ போடுவதன் மூலம் இனி வரும் காலங்களில் 5,544 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.