ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஆண்டறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் நிதிநிலை, நிர்வாகிகளின் பங்குத்தொகை , ஊதியம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் ஊதியத்தொகைதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது என்னவென்றால், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த 11 ஆண்டுகளாக தனது ஊதியத்தொகையை 15 கோடி ரூபாயாகவே மெயின்டெய்ன் செய்துவருகிறார். 2008-09ஆம் ஆண்டுக்குப்பின் தனது ஊதியத்தொகையை அவர் உயர்த்தவே இல்லை.
தற்போதைய சந்தை மதிப்பில், 903 கோடி ரூபாய் மதிப்புள்ள நபராக முகேஷ் அம்பானி இருந்தாலும், தனது சகாக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ஊதிய உயர்வு வேண்டாம் என 11 ஆண்டுகளாக மறுத்துவருகிறார் முகேஷ்.