ETV Bharat / business

பல செயற்கை நுண்ணறிவு மாடல்களுக்கு பயிற்சி... மைக்ரோசாப்ட்டின் சூப்பர் கம்ப்யூட்டர்!

சியாட்டில்: மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களுக்கு பயிற்சி தருவதற்கு OpenAI நிறுவனத்துடன் இணைந்து புதிய சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட்
author img

By

Published : May 21, 2020, 9:57 AM IST

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு, OpenAI நிறுவனத்துடன் இணைந்து சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை தயாரிக்க முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டது. இந்த சூப்பர் கம்ப்யூட்டரில் 2,85,000க்கும் மேற்பட்ட சிபியு கோர்கள் (CPU cores) , 10 ஆயிரம் ஜி.பி.யூக்கள் (GPUs),ஒவ்வொரு ஜி.பி.யூவும் விநாடிக்கு 400 ஜிகாபிட் (400 gigabits per second) நெட்வொர்க் இணைப்பை வழங்குவது போன்ற பல்வேறு திறன்கள் உள்ளன. உலகின் TOP500 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் தயாரித்த சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் முதல் ஐந்து இடங்களில் வந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கெவின் ஸ்காட் கூறுகையில், " நூறுக்கும் மேற்பட்ட உற்சாகமான விஷயங்களை ஒரே நேரத்தில் இந்த சூப்பர் கம்ப்யூட்டரால் செய்திட முடியும். இந்த கணினி செயல்பாட்டை கற்பனை செய்வதுகூட கடினம். உபயோகத்துக்கு வந்த பிறகு பலரும் அதன் செயல்பாட்டை கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்றார்.

பிங், ஆபிஸ், டைனமிக்ஸ் போன்ற தயாரிப்புகள் மேம்படுத்துவதற்காகவே மைக்ரோசாப்ட் பெரிய AI மாதிரிகள், டூரிங் மாடல்களை உருவாக்கியுள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் டீப் ஸ்பீட்டின் (DeepSpeed) புதிய பதிப்பானது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பதிப்பைவிட மிகவும் திறமையானது என்றும், 10 மடங்கு வேகமான மாடல்களைப் பயிற்றுவிக்க மக்களை அனுமதிக்க செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விளம்பரதாரர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சம் யூ-டியூப் செலக்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.