இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், சிறிய கடைகள், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இணையத்தில் விற்க உதவும் ஒரு திட்டமான ‘அமேசானில் உள்ளூர் கடைகள்’ தொடங்கப்படுவதன் மூலம் அனைத்து பொருட்களையும் உடனடியாக பயனர்களுக்கு சென்றடையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமேசான் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ-மார்ட், வாட்ஸ்-ஆப் இணைந்து சிறு கடைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கு இடையில் நிகழும் பணப் பரிவர்த்தனைக்கு புதிய ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து, அமேசான் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
Realme X50 Pro 5G: ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
அமேசான் நிறுவனம் இதற்காக 10 கோடி ரூபாய் உடனடியாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஆட்களை நியமித்து, அமேசானுடன் கடைகளை இணைக்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் கடையின் தகவல்களை, அமேசான் நிர்வாகியிடம் தெரிவித்து பதிவுசெய்துகொள்ளலாம்.
இதன்மூலம் சிறு வணிகர்களும், பெருமளவில் பயன்படுவர் என்று அமேசான் தரப்பில் நம்பப்படுகிறது.