லண்டன்: கோவிட்-19 நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிக்கு ஊக்கியாக பயன்படும் துணை மருந்தை 100 கோடி டோஸ் அளவுக்கு தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கிளாக்ஸோ ஸ்மித் க்ளீன் நிறுவனம்.
இதன் தயாரிப்பை தொடங்கியுள்ளதாக கூறியிருக்கும் நிறுவனம், ஆபத்து காலங்களின் இதன் பயன்பாடு மிக தேவைப்படும் ஒன்றாக இருக்கும். எனவே, இந்த தயாரிப்புக்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து உதவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற ஆபத்து காலத்தில் பயன்படக்கூடிய மருத்துவ தேவைகளை உணர்ந்தே, நிறுவனம் இந்த தயாரிப்பைத் தொடங்கியுள்ளது என நிறுவனத்தின் தலைவர் ரோஜர் கொன்னொர் தெரிவித்துள்ளார்.
இந்த துணை மருந்தின் காரணமாக நிறைய கோவிட்-19 நோயாளிகள் குணமடைய வாய்ப்புள்ளது. மேலும், இந்த மருந்துகள் 2021ஆம் ஆண்டு அனைத்து தயாரிப்பு பணிகளும் முடிந்து, அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தயாராகும் என்று கூறப்பட்டுள்ளது.