பொழுதுபோக்குக்காக கேம்ஸ் விளையாடிய காலம் சென்று, தற்போது கேம்ஸ் விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திற்கு மக்கள் மாறிவிட்டனர். அதற்காகத்தான், இவார் கேம்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில், போட்டிகள், லீக் போன்றவற்றில் மக்கள் முன்பதிவு கட்டணம் செலுத்தி கலந்துகொள்ளுவார்கள். வெற்றிபெறுபவர்களுக்கு பணம், பரிசுகள் கிடைக்கும். மிகவும் குறைவான முன்பதிவு கட்டணம் மூலம் பல்க் பணம் கேம் பிரியர்களுக்கு கிடைப்பதால் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட இவார் கேம்ஸ் நிறுவனத்தின் இவார் செயலியில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் இயக்குநர் பார்த் சாதா (Parth Chadha) கூறுகையில், "ஊரடங்கில் இவார் கேம்ஸ் விளையாடும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
தினந்தோறும் கேம் பிரியர்களின் வருகை எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கிற்கு முன்பு, மாலை, இரவு நேரங்களில் மட்டுமே மக்கள் அதிகளவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஆனால், தற்போது நாள் முழுவதும் விளையாடுகின்றனர். கேமர்ஸ் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் சந்தேகங்களைத் தீர்க்கும்வகையில் 24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: சாம்சங் டிவியில் வருகிறது ஆப்பிள் மியூசிக்!