பெங்களூரு: கோவிட்-19 தாக்கத்தினால், பணியாளர் தேர்வு, சம்பள உயர்வு, பதவி உயர்வு என அனைத்தையும் நிறுத்திவைத்துள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். மேலும், புதிய நியமனங்களையும் நிறுத்திவைத்துள்ளோம்" என இன்ஃபோசிஸ் முதன்மை நிதி அலுவலர் நிலஞ்சன் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், "நிறுவனத்தின் செலவினங்களில் கூடுதல் சுமை, புதிதாக வருவாயை ஈட்டமுடியாததன் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
தங்களிடம் பணிபுரியும் 6,000 பயிற்சி ஊழியர்களை வீட்டிலிருந்தே பயிற்சியை மேற்கொள்ள இன்ஃபோசிஸ் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.