ETV Bharat / business

பயனாளிக்கு தரவேண்டிய ரூ. 26.67 லட்சத்தை எல்.ஐ.சி உடனடியாகச் செலுத்த உத்தரவு! - Consumer Grievance Redressal

எல்.ஐ.சியின் ஜீவன் சரல் காப்பீட்டு திட்டச் சட்டத்தில் உள்ள எழுத்து பிழையை காரணமாகச் சொல்லி பயனாளிக்கு செலுத்தாமல் இருந்த காப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே செலுத்துமாறு மாநில நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

State consumer forum, LIC News, Deepak Kothari news, Life Insurance Corporation news, insurance claim in India  LICs Jeevan Saral insurance Scheme, State consumer grievances redressal forum, NCDRC news, Consumer Grievance Redressal, எல்ஐசியின் ஜீவன் சரல் காப்பீட்டு திட்டம்
LIC’s Jeevan Saral insurance Scheme
author img

By

Published : Jan 24, 2020, 7:40 PM IST

மும்பை: மாநில நுகர்வோர் மன்றம் தீபக் கோத்தாரி எனும் பயனாளிக்கு காப்பீடு நிலுவைத் தொகையான ரூபாய் 26.67 லட்சத்தை செலுத்த உத்தரவிட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்' சென்னையில் அறிமுகம்!

மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் சரல் காப்பீட்டு திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்கான காப்பீட்டுத் தொகையான ரூபாய் 13.65 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். இந்த காப்பீட்டு திட்டத்தின் அம்சமாக, காப்பீடு முடியும் காலத்தில் ரூபாய் 25 லட்சமும், கூடவே பயனாளிக்கு மரணம் நிகழ்ந்தால் ரூபாய் 3.94 லட்சமும், விபத்து நடந்து படுகாயமடைந்தால் ரூபாய் 15 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், காப்பீட்டின் காலம் முடிவடைந்த பின்னர், எல்.ஐ.சி தரப்பில் ரூபாய் 3.94 லட்சமும், அதன் லாபமாக 1.68 லட்சத்தை மட்டுமே தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோன கோத்தாரி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதிரும் இன்ஸ்டாகிராம் - இளம்வயது ரத்தன் டாடா

இதைத் தொடர்ந்து, கோத்தாரி எல்.ஐ.சியை அணுகியபோது, மொத்த காப்பீட்டுத் தொகை குறித்த அவரது படிவத்தில் உள்ள எழுத்துப்பிழை காரணமாக, காப்பீட்டு தொகை நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதற்கு இன்று தீர்ப்பளித்துள்ள நுகர்வோர் நீதிமன்றம், கோத்தாரிக்கு சேரவேண்டிய நிலுவைக் காப்பீட்டுத் தொகையான ரூபாய் 25 லட்சத்தையும், அவர் செலுத்தியத் தொகைக்கு மார்ச் 28, 2015ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு 9% விழுக்காடு வட்டித் தொகையும், மன உளைச்சலுக்காக 50ஆயிரம் ரூபாயும் வழங்க தீர்ப்பளித்துள்ளது.

பிப்ரவரி 4 முதல் செப்டம்பர் 30, 2017 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தரவுகளின்படி 4.97 கோடி பேர் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

blank

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.