ETV Bharat / business

இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி! - citibank India

அமெரிக்காவின் முக்கிய வங்கியான சிட்டி வங்கி, இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து சில்லறை வங்கி செயல்பாட்டு சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Citibank
சிட்டி வங்கி
author img

By

Published : Apr 16, 2021, 12:40 PM IST

அமெரிக்காவின் முன்னணி வங்கியாகத் திகழ்ந்து வரும் சிட்டி வங்கிக்கு, ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரகம், லண்டன் ஆகியவை முக்கிய சந்தை ஆகும். எனவே, முக்கியமான சந்தைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்திட சிட்டி வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற சிட்டி வங்கி முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து வங்கியின் உயர் அலுவலர்கள் கூறுகையில், "வெளியேறுவது என்பது இந்தியப் பிரிவை மூடுகிறது என எடுத்துக்கொள்ள தேவையில்லை. நடப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் உடனடியாக ஏற்படாது. இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. இந்திய ரீடெய்ல் பிரிவை வாங்குவதற்கு மாற்று நிறுவனத்தைத் தேடி வருகிறோம். இதனால், வங்கியின் தற்போதைய செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும்” எனத் தெரிவித்தனர்.

இந்தியாவில் சிட்டி வங்கிக்கு 35 கிளைகள் உள்ளன. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வங்கிக்கு 12 லட்சம் வங்கிக் கணக்குகளும், 22 லட்சம் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களும் உள்ளனர். உலகம் முழுவதும் சிட்டி வங்கிக்கு 224 கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வங்கி என்பது வெறும் லாபம் ஈட்டும் தொழிலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.