இந்தியாவின் முன்னணி பிரத்யேக காஃபி விற்பனை நிறுவனமான காஃபே காஃபி டே என்ற நிறுவனத்தை உருவாக்கிய வி.ஜி சித்தார்த்தா மர்மமான முறையில் உயிரிழந்தார். நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில் நிறுவனத்தின் அடுத்த நிர்வாகியை அந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
அந்நிறுவனத்தின் சுதந்திர இயக்குனரான ரெங்காநாத் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என காஃபே காஃபி டே நிறுவனத்தின் நிர்வாக்குழு அறிவித்துள்ளது. வி.ஜி சித்தார்த்தாவின் மனைவியான மாளவிகா ஹெக்டே நிர்வாகக் குழுவின் மீது முழு நம்பிக்கையும், ஆதரவையும் தருவதாகக் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.