டெல்லி: பொழுதுப்போக்கு காட்சிகளை பதிவுசெய்யும் டெக் நிறுவனமான புக் மை ஷோ, 270 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
ஓலா, உபெர், சொமாடோ, சுவிகி போன்ற பிரபல டெக் சேவை நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் தங்களின் ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. கரோனா தாக்கத்தின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கிப்போயின.
போதிய வருவாய் இல்லாததால் ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றியது நிறுவனங்கள். தற்போது அதே நடவடிக்கையில் புக் மை ஷோ நிறுவனம் இறங்கியுள்ளது.
கடும் நெருக்கடியில் போயிங் - லட்சக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றம்!
கரோனா ஊரடங்கால் திரையரங்குகளும், கேளிக்கை நிகழ்ச்சிகளும் முற்றிலும் தடைபட்டன. இதனால் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்தது இந்நிறுவனம்.
அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் உலகளவில் உள்ள தங்களின் 1,450 ஊழியர்களில், 270 பேரை வெளியேற்ற நிறுவனம் முடிவுசெய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாகி ஆஷிஷ் ஹெம்ரஜானி தெரிவித்துள்ளார்.