ETV Bharat / business

கடும் நெருக்கடியில் போயிங் - லட்சக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றம்! - போயிங் நிறுவனம்

போயிங் நிறுவனத்தில் பணியாற்றும் 10 விழுக்காடு ஊழியர்களை வெளியேற்றவும், பதவிகளை குறைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து 60ஆயிரம் பேர் வேலை இழக்கலாம் எனத் தெரிகிறது.

Boeing slashes 12000 jobs
Boeing slashes 12000 jobs
author img

By

Published : May 28, 2020, 12:01 PM IST

நியூயார்க்: இந்த வாரத்தில் மட்டும் 12ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நெருக்கடியை சமாளிக்கவும், செலவுகளை குறைக்கவும் ஊழியர்களை வெளியேற்றுவதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம், ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பதாகவும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இச்சூழலில், போயிங் நிறுவனம் 12,000 ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் விமானப் போக்குவரத்து துறையும் ஒன்று.

வீட்டில் இருக்கச் சொல்லி ஊழியர்களுக்குக் கூடுதலாக ஆயிரம் டாலர்களை அளிக்கும் கூகுள்

அமெரிக்காவைச் சார்ந்த முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங், இந்த வாரத்தில் 6,770 ஊழியர்களை வெளியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வரும் வாரங்களில் 5,520 ஊழியர்களை தாமாக சலுகைகளை அறிவித்து வெளியேறுவதற்கு முடிவுசெய்துள்ளது.

கரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் விமானப் போக்குவரத்து 96 விழுக்காடு வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது விமானப் போக்குவரத்து லேசாக முன்னேற்றம் கண்டுள்ளது.

போயிங் நிறுவனம் ஒட்டுமொத்தமாக தனது ஊழியர்களில் 10 விழுக்காட்டினரை வெளியேற்றப்போவதாக தெரிவித்துள்ளது. இதன்படி ஏறக்குறைய 1,60,000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் ஏராளமான ஊழியர்கள் குறைக்கப்படவுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பணிகள் நீக்கப்படவுள்ளதாகவும் போயிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என போயிங் தெரிவித்துள்ளது.

600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய பெரு நிறுவனம்!

எனினும் வெளிநாடுகளில் எத்தனை பேர் வெளியேற்றப்படுவார்கள் என போயிங் தகவல் வெளியிடவில்லை. இந்தியாவிலும் போயிங் நிறுவனம் தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.