வணிகப் பிரிவு (ஈடிவி பாரத்): ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முழு அளவிலான தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க மின்னணு வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
இதுவரையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், மேக் புக் போன்ற தகவல் சாதனங்களை வாடிக்கையாளர்கள் பெற அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக தளத்தை நாடவேண்டி இருந்தது. தற்போது அப்பிள் நிறுவனத்தின் இணையதளம் மூலம் பயனாளர்கள் நேரடியாக சலுகை விலையுடன் நிறுவனத்தின் பொருட்களை பெறமுடியும்.
ஆப்பிளின் நேரடி மின்னணு வர்த்தகத்தின் மூலம் பயனார்களுக்கு என்ன லாபம்?
- எச்.டி.எஃப்.சி கடன் அட்டை மூலம் 20,900 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 6% சலுகைகள் (ரூ.10,000 வரை) பெற முடியும்.
- அனைத்து விதமான மாதத் தவணை சலுகைகளும் கிடைக்கும்.
- வாங்கும் அனைத்து பொருட்களும் இலவசமாக வீட்டிற்கு கொண்டு தரப்படும்.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நேரடி சலுகைகள் வழங்கப்படும்.
- இரண்டு ஆண்டுகள் கூடுதல் உத்தரவாதம் வழங்கப்படும்.