பீனிக்ஸ் (அமெரிக்கா): ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 839 கோடி ரூபாயை கொண்டு பழைய ஐபோன் பேட்டரிகளின் ஆயுளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2017ஆம் ஆண்டு ஒரு புதிய பதிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கைபேசிகளில் பேட்டரிகளின் திறன் மோசமடைந்ததாக பயனர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் பழைய பேட்டரிகளை மாற்றி கொடுத்தது.
இதேநிலை தற்போதைய மென்பொருள் புதுப்பித்தலின்போது பழைய ஐபோன் கைபேசிகளில் நிகழ்ந்துள்ளது. இதனை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 839 கோடிக்கு மேல் செலவிடவுள்ளது.