மும்பை: வசதி வாய்ப்பின்மை காரணமாக தேசிய குத்துச்சண்டை வீரர் அபிட் கான் ஆட்டோ ஓட்டி வந்த சூழலில், அவரின் காணொலி ஒன்று இணையத்தில் வைரலானது.
இந்த வைரலான காணொலியின் பின்னால் அபிட் கான் ஓட்டி வந்த மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோவும் இருந்தது. இது தொடர்பான செய்தியை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, குத்துச்சண்டை பயிற்சி பள்ளி தொடங்க அபிட் கானுக்கு உதவ போவதாகத் தெரிவித்துள்ளார்.
'எங்கப்பா இருக்க என் தங்கமே!' - நாமக்கல் இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
முன்னதாக விஜேந்தர் சிங், மனோஜ் குமார், ஃபர்ஹான் அக்தர் போன்ற பிரபலங்கள் 60 வயது அபிட் கான் தொடர்பான காணொலிகளை பகிர்ந்து இணையத்தில் அதிகம் பகிர காரணமாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பூங்காக்களில் வைத்து அபிட் கான் குத்துச்சண்டை பயிற்சியளிக்க தொடங்கியுள்ளார்.
ஆனந்த் மஹிந்த்ராவை பொறுத்தவரை சமூக பணிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் குறைந்த விலையில் மக்களுக்கு உணவளித்து வந்த இட்லி பாட்டிக்கு கடை அமைக்க சொந்த இடமும், வீடு கட்டி தரவும் ஏற்பாடுகள் செய்துகொடுத்தார். இதேபோன்று பலருக்கும் உதவி வருகிறார். அந்த வகையில் அபிட் கானுக்கு பயிற்சி பள்ளி கட்ட உதவியளிக்கப்படும் என்ற ஆனந்த் மஹிந்திராவின் உறுதிமொழி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.