உலகளவில் பிரபலமான கூகுள் நிறுவனம், பல சமூக சேவைகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. சமீபத்தில் உலகை அச்சுறுத்தும் கரோனா தடுப்பு பணிக்காகவும் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்நிறுவனத்தினர் அகதிகள் நலனுக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட மெனா பிராந்தியத்தில் இருக்கும் அகதிகள், சமூக உறுப்பினர்கள் ஒரு ஆண்டிற்கு டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்ளும் Google.org சார்பில் ஆன்லைன் பயிற்சி வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
அதே போல், பல நாடுகளில் இருக்கும் அகதிகளுக்கும், பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு தேவையான நீர், மருத்துவ பராமரிப்பு சுகாதாரப் பொருள்கள் வழங்க ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு யூ-ட்யூப் ஏற்கனவே, இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 89 லட்சம் ரூபாய்) நன்கொடையாக அளித்துள்ளது.
இந்நிலையில், Google.orgஇன் தலைவர் ஜாக்குலின் புல்லர் கூறுகையில், "2015 ஆம் ஆண்டிலிருந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளுக்கு அவசரகால ஆதரவு, முக்கிய தகவல்கள் மற்றும் கல்வி வளங்களை அணுகுவதற்கு Google.org சார்பில் 30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கியுள்ளோம்.
ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு ஏற்கனவே நிதியுதவி அளித்த நிலையில், தற்போது அகதிகளின் வாழ்வாதாரத்தை மாற்றவும், பணியில் முன்னெற்றம் எற்படுத்தவும் மீண்டும் 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஐ.நா அகதிகள் அமைப்புக்கு ஐந்தரை லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 4 கோடியே 16 லட்சம் ரூபாய்) நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக அகதிகள் தினம் - மனித குலத்தின் முன் நிற்கும் கடமை என்ன?