ஹைதராபாத்: உலகெங்கிலும் உள்ள இணைய சில்லறை வணிக நிறுவனங்களில் அலுவலகத்தை ஒப்பிடுகையில், அமேசானின் 9.7 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அலுவலகம்தான் மிகப் பெரியது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 15 மாடியுள்ள வளாகமானது 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மூன்று உயர் வசதி சொகுசுத் தளங்கள், 12 அலுவலக தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தில் 15,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் கொண்டு இயங்கவல்லது. தற்போது இந்த அலுவலகத்தில் 7,000 ஊழியர்கள் வேலை செய்துவருகின்றனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள இணைய சில்லறை வணிக நிறுவனங்களில் அலுவலகத்தை ஒப்பிடுகையில், அமேசானின் 9.7 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அலுவலகம்தான் மிகப்பெரியது என்று கூறப்பட்டுள்ளது. இதன் மொத்த கட்டுமான பரப்பளவை 65 கால்பந்து மைதானங்களுடன் ஒப்பிட முடியும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வளாகத்தில் ஈபிள் கோபுரத்தைவிட 2.5 மடங்கு அதிகமான இரும்பு பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் பெரும்பாலும் தொழில்நுட்பக் குழுப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இங்கு இயந்திரக் கற்றல், மென்பொருள் மேம்பாடு குறித்த சேவைகளைப் புதுமைப்படுத்துவதில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.