கரோனா லாக்டவுன் காரணமாக விமானப் போக்குவரத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக முற்றிலுமாக முடங்கியுள்ளது. லாக்டவுன் இறுக்கம் தற்போது தளர்த்தப்படும் நிலையில், முதல்கட்டமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.
இதையடுத்து, இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா மீண்டும் விமானப் பயணத்திற்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. 21 இடங்களுக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ள ஏர் ஏசியா, தனது பயணிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பயணத்திற்கான நிபந்தனைகளாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, பயணிகள் அனைவரும் இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு வந்து முன்னெச்சரிக்கை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பயணிகளும் ஆரோக்கியா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அனைவரும் முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: வேலைதேடும் முறையில் ஏற்பட்ட மாற்றம்