இந்தியாவில் பொதுக்கழிப்பிடங்களை இருக்கும் இடத்தினை கண்டுபிடிப்பது பொதுமக்களுக்கு சிரமமாகவே இருந்து வருகிறது. அதனை கண்டுபிடித்தாலும் சுத்தமாக இல்லாததால் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் அளவிற்கே இருக்கக்கூடும். எனவே மக்கள் நலனுக்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் கூகுளுடன் இணைந்து "லூ ரிவ்யூ" பரப்புரை திட்டத்தை, 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் தொங்கியது. கழிப்பிடத்தின் இடத்தினை அறிவதற்கும் ,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உபயோகிக்கக் கூடிய கழிப்பிடமா என்பதை மதிப்பிடுங்கள் என்று கூகுள் பயனாளர்களுக்கு அறிவித்திருந்தது.
இதனை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்துக் கூறுகையில், "கழிப்பிடம் இடத்தினை கண்டறியும் வசதியானது செயலியில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது" எனத் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நகரங்களில் மட்டுமே 45000 கழிப்பிடம் இருப்பிடம், கூகுள் மேப்ஸில் இணைக்கப்பட்டுள்ளது.
இச்செயலியின் உதவி மூலமாகப் பக்கத்தில் இருக்கும் கழிப்பிடத்தின் தூரம், உபயோக நிலைமையில் உள்ளதா என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். பெண்கள், மூத்த குடிமக்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த தகவல்கள் அனைத்துமே கூகுள் பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் மூலமாகவே கண்டறியப்பட்டுள்ளது.