மும்பை: ஒரு நாளைக்கு ரூ.22 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரத்து 904 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார் விப்ரோ ஐடி நிறுவனத்தின் உரிமையாளர் ஆசிம் பிரேம்ஜி. கடந்தாண்டு ஷிவ் நாடார், ரூ.826 கோடி நன்கொடை அளித்து முதலிடத்தில் இருந்தார். அப்போது, ஆசிம் பிரேம்ஜி ரூ.426 கோடி நன்கொடை அளித்திருந்தார்.
பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானி மூன்றாவது இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டும் இவர் மூன்றாம் இடத்தில்தான் இருந்தார். அவர் ரூ.458 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நிதி அளித்ததில் டாடா சன்ஸ் ரூ.1500 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இவர்களை தொடர்ந்து, ஆசிம் பிரேம்ஜி ரூ.1,125 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், ரூ.510 கோடியுடன் முகேஷ் அம்பானி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இது தவிர பிஎம்., கேர்ஸ் அறக்கட்டளைக்கும் டாடா சன்ஸ் ரூ.500 கோடி அளித்தது. இதேபோல் ரிலையன்ஸ் ரூ.500 கோடியும், ஆதித்யா பிர்லா குரூப் ரூ.400 கோடியும் அளித்தன. இந்த வகையில் 2020 நிதியாண்டில் விப்ரோ ஆசிம் பிரேம்ஜியின் ஒட்டுமொத்த நன்கொடை ரூ.12,050 கோடி ஆகும். இவர்கள் தவிர அமித் சந்திரா ரூ.27 கோடியும், இன்போசிஸ் நந்தன் நிலேகானி ரூ.159 கோடியும், எஸ். கோபாலகிருஷ்ணன் ரூ.50 கோடியும், எஸ்டி சிபுலால் ரூ.32 கோடியும் வழங்கியுள்ளனர்.
109 பேர் இந்தப் பட்டியலில் ரூ.5 கோடிக்கும் மேல் நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் 7 பெண்கள் உள்ளனர். அதில் ரூ.47 கோடியுடன் ரோகினி நிலேகானி முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் நிதிதிரட்டல்: தனிபட்ட நிதி தேவைகளுக்கு பணம் திரட்டலாம்!