ETV Bharat / business

வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் பெயர் மாற்றம்!

டெல்லி: வோடபோன் ஐடியா தனது புதிய ஒருங்கிணைந்த பிராண்ட் அடையாளத்தை இன்று வெளியிட்டுள்ளது. இனிமேல் வோடபோன்-ஐடியா நிறுவனம் Vi (We) என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vodafone and Idea are now 'Vi'
Vodafone and Idea are now 'Vi'
author img

By

Published : Sep 7, 2020, 3:45 PM IST

இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் மற்றும் ஐடியா ஒரு காலத்தில் முக்கிய நிறுவனங்களாக இருந்தன. வோடபோன் நிறுவனத்தின் zoozoo விளம்பரங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.

ஆனால், ஜியோவின் வருகை இந்திய டெலிகாம் சந்தையையே புரட்டிப்போட்டது. ஜியோவின் அதிரடி இலவச டேட்டா ஆப்பர்களால் மற்ற நிறுவனங்கள் திண்டாடி போனார்கள். ஏழு நிறுவனங்களை கொண்டிருந்த இந்தியாவின் டெலிகாம் சந்தை, ஜியோவின் வருகைக்குப் பின் நான்காக (அரசின் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா) சுருங்கியது.

ஜியோவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஏதுவாக இந்தியாவின் இரண்டு முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருந்த வோடபோனும ஐடியாவும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படும் என்று 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த இணைப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைந்த பிராண்ட் அடையாளம் Vi இன்று வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் வோடபோன்-ஐடியா நிறுவனம் Vi (We) என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வோடபோன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரவிந்தர் தக்கார் கூறுகையில், "இந்த புதிய Vi உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பு நிறைவடைவதைக் குறிக்கிறது. இது மட்டுமல்லாமல், 100 கோடி இந்தியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தை கொண்டுவருவதற்கான பயணத்தைத் தொடங்குகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: IFA Berlin 2020: 200 மில்லி விநாடிகளில் பதிலளிக்கும் சென்சார் கருவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.