ETV Bharat / business

ப்ளூ டிக்கை மீண்டும் எடுத்துவரும் ட்விட்டர்! - நீல நிற பேட்ஜ்

டெல்லி : ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் குறிப்பிடத்தக்க நபர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் நீல நிற பேட்ஜை (blue varified badge) மீண்டும் வழங்கவுள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

Twitter
Twitter
author img

By

Published : Nov 25, 2020, 7:38 PM IST

Updated : Nov 26, 2020, 3:15 PM IST

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் முக்கிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக அந்நிறுவனம் நீல நிற பேட்ஜ் (blue varified badge) வழங்கி வந்தது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்களை ட்விட்டர்வாசிகளால் எளிதில் அடையாளம் காண முடிந்தது.

ஆனால் இந்த நீல நிற பேட்ஜ் முறை பெரிய அளவு குழப்பத்தை ஏற்படுத்துவதாக பலரும் புகாரளித்தைத் தொடர்ந்து பேட்ஜ் வழங்கும் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிமாக நிறுத்தியது.

இந்நிலையில், நீல நிற பேட்ஜை வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் தேர்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது முறையான மற்றும் பாதுகாப்பான உரையாடல்களை கட்டமைக்க இந்த பேட்ஜ் எவ்வளவு உதவியது என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே மீண்டும் இந்த பேட்ஜை வழங்கும் முறையை அறமுகப்படுத்தவுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பிராண்டுகள், தொண்டு நிறுவனங்கள், செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டுத் துறையின் முக்கிய நபர்களுக்கு இந்த பேட்ஜ் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பேட்ஜை கூடுதலாக பிற துறைகளுக்கு வழங்கலாம், ட்விட்டர் கணக்குகளை சரிப்பார்க்க என்ன மாதிரியான வழிகாட்டுகல்களைப் பின்பற்றலாம் என்பது குறித்த ஆலோசனைகளை மக்கள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வரை அளிக்கலாம்.

மேலும், ஒரு கணக்கிற்கு நீல பேட்ஜ் அளிக்கப்பட்ட பின், அந்தக் கணக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஆக்டிவாக இல்லை என்றால் நீல பேட்ஜை ட்விட்டர் நீக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணமா?

Last Updated : Nov 26, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.