ஹைதராபாத்: கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், மோசமடைந்த வாகனத் தொழில்துறையின் ஒட்டுமொத்த மந்தநிலையை கடந்த சில மாதங்களில் இந்தியாவில் டிராக்டர் விற்பனை சமாளித்துள்ளது.
அந்த வகையில், ஜூன் மாதத்தில் டிராக்டர் விற்பனை பதிவுகள் 10.9 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்தத் தரவுகள் இந்தியாவில் விவசாய பொருளாதாரம் தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இந்த ஆண்டு பருவமழை மற்றும் ஒரு ராபி பயிர் அறுவடை ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் டிராக்டர் விற்பனையை உயர்த்தியுள்ளன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் கிராமப்புற இந்தியா வளர்கிறது என்று வாதிடுவதற்கு டிராக்டர் விற்பனை தரவைப் பயன்படுத்துவதை நிபுணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு அவர்கள் கூறும் மூன்று காரணங்கள் வருமாறு:
- 1) தேவை அதிகரிப்பு
டிராக்டர் விற்பனை அதிகரித்து வருவது சில தேவைகளின் குறிகாட்டியாக இருக்கலாம்.
இந்திய பொருளாதாரம் குறித்து அனுபவமிக்கவரும், ‘பேட் மணி (Bad Money)’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான விவேக் கவுல் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “ஏப்ரல்- ஜூன் மாதங்களுக்கு இடையிலான காலம் டிராக்டர் விற்பனையின் பாரம்பரிய பருவமாகும். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் இந்தக் காலகட்டத்தில் விற்பனை 13.7 சதவீதம் குறைந்துள்ளது. ஆகையால், கடந்த இரண்டு மாதங்களில் அதிக விற்பனை நடந்துள்ளது. மேலும், வாகனத் துறையின் மூத்த வீரர் அருண் மல்ஹோத்ராவும், இந்த ஆண்டு டிராக்டர் விற்பனையின் வளர்ச்சி குறைந்த வீதத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.
இது குறித்து மல்ஹோத்ரா கூறுகையில், “விற்பனை நன்றாக இருந்தாலும், அது சாதனை ஆண்டு அல்ல. கடந்த ஆண்டு (2019-20) டிராக்டர்களுக்கு மோசமான ஆண்டாக இருந்தது, ஏனெனில் விற்பனை முந்தைய ஆண்டின் அளவை விட 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டின் எண்ணிக்கை 2018-19-ஐ விட இன்னும் குறைவாக உள்ளது” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
- 2) பணக்கார விவசாயி மட்டுமே வாங்க முடியும்
மேலும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், டிராக்டர் விற்பனை தரவு என்பது விவசாய சமூகத்தின் மிகச் சிறிய பகுதியாகும். இது எந்த வகையிலும் குறு விவசாயிகளின் நிலையை பிரதிபலிக்காது.
டிராக்டர் விற்பனையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பெரிய விவசாயிகள் சிறப்பாக செயல்படுவதைக் குறிக்கிறது. 30க்கும் மேற்பட்ட குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் சக்தி கொண்ட டிராக்டர் வாங்க ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவாகும். ஒரு சராசரி விவசாயி அந்த அளவு மதிப்புள்ள ஒரு டிராக்டரை வாங்குவது கடினம். எனவே, அதிகரித்து வரும் டிராக்டர் விற்பனை ஒட்டுமொத்த விவசாய பொருளாதாரத்தில் மீட்கப்படுவதற்கான ஒரு குறிகாட்டியாக பார்க்கக்கூடாது.
3) வேளாண் அல்லாத நடவடிக்கைகளில் பயன்பாடு
இதுமட்டுமின்றி, டிராக்டர் விற்பனை வளர்ந்து வரும் விவசாய பொருளாதாரத்தின் துல்லியமான குறிகாட்டியாக இல்லை என்பதற்கான மூன்றாவது வாதம் என்னவென்றால், விவசாயிகளின் வருமானத்தின் வளர்ச்சியைத் தவிர வேறு பல காரணிகளும் டிராக்டர் விற்பனையை முடுக்கிவிட்டுள்ளன.
மேலும், டிராக்டர்கள் தற்போது வணிக நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவைகள் மீது அரசாங்கம் எந்தவொரு கலால் வரியையும் வசூலிக்கவில்லை” என்றார்.
இந்தியாவில் ஆட்டோமொபைல் சில்லறை வர்த்தக துறையின் உச்ச தேசிய அமைப்பான ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷனின் கூட்டமைப்பின் (ஃபாடா) தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே, “வாகனத் துறைக்கான முழு ஆண்டு கண்ணோட்டம் எதிர்மறையாக தொடர்கிறது. டிராக்டர்கள் தவிர, பல்வேறு பிரிவுகளில் சில்லறை விற்பனையின் வளர்ச்சி 15-35 சதவீதம் வரை குறைந்துள்ளது” என இந்த மாத தொடக்கத்தில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.