டெல்லி: சரக்கு, சேவை வரி 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இழப்பை சந்தித்துள்ள மாநிலங்களின் வருவாயை சரிகட்டும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு கடன் திட்டத்துக்கு 13 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
அதாவது, நடப்பு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை மத்திய அரசு செலுத்த இயலாமையை வெளிப்படுத்தியதையடுத்து இந்த மாநிலங்கள் ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட சிறப்பு சாளரத்தின் மூலம் கடன் வாங்கத் தெரிவு செய்துள்ளன.
முன்னதாக, ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டத்தில், ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி வசூல் இரண்டும் கடுமையாக இருந்ததால், 2020-2021 (ஏப்ரல்-மார்ச் காலம்) நிதியாண்டில் அவர்களின் வருவாய் வசூலில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய இயலாமையை மத்திய அரசு வெளிப்படுத்தியது.
நிதி அமைச்சகத்தின் தகவல்படி, இதுவரை 13 மாநிலங்கள் இந்த நிதியாண்டில் தங்கள் வருவாய் வசூலில் உள்ள பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு வழங்கிய கடன் விருப்பத்தை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன.
அந்த 12 மாநிலங்கள் ஆந்திரா, பிகார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஒடிசா ஆகியவை ஆகும்.
மணிப்பூர் மட்டுமே இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் கீழ் ஒரு மாநிலம் அதன் வருவாய் சேகரிப்பில் முழு இடைவெளியையும் கடன் வாங்க முடியும், ஆனாலும் அதற்கு வட்டி செலுத்த வேண்டும்.
கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் பரவலின் பாதகமான பொருளாதார தாக்கம் மற்றும் செயல்படுத்தலில் சுணக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் நடப்பாண்டு மாநிலங்களின் வருவாய் வசூலில் ரூ.3 லட்சம் கோடி பற்றாக்குறை இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், ஜிஎஸ்டி வரி வசூலில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடியை செலுத்த மத்திய அரசு விரும்புகிறது. அவ்வாறு நடந்தாலும், 2.3 லட்சம் கோடி நிலுவையாக இருக்கும்.
மேலும், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை ஆறு மாநிலங்கள் ஓரிரு நாள்களில் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவரான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேறு சில மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்துள்ளன என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் ஈடிவி பாரதிடம் தெரிவித்தன. இந்த மாநிலங்கள் மத்திய அரசு வழங்கும் இரண்டு விருப்பங்களில் எதையும் தேர்வு செய்யவில்லை.
ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐந்தாண்டு கால இடைவெளியில் மாநிலங்களின் வருவாய் வசூலில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுசெய்யும் ஒரு இறையாண்மை வாக்குறுதியை மீறுவதாக குற்றம் சாட்டிய கேரளா, பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக விமர்சித்தன.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களின் வருவாய் வசூலில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுசெய்யும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
அதே நேரத்தில் 2015-16 நிதியாண்டில் வருவாய் வசூலை மேற்கொள்வதன் மூலம் ஆண்டுக்கு 14 சதவீத கூட்டு வளர்ச்சியைக் எதிர்நோக்கியது. ஆனால், முதல் இரண்டு ஆண்டுகளில், ஜிஎஸ்டி வசூல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டிய தேவையை விட அதிகமாக இருந்தது.
இருப்பினும், மூன்றாம் ஆண்டில் (2019-20), முந்தைய இரண்டு ஆண்டுகளின் உபரியைப் பயன்படுத்துவதன் மூலமும், ரூ.33 ஆயிரத்து 412 கோடியை மாற்றுவதன் மூலமும் நிர்வகிக்கப்பட்ட ரூ.95 ஆயிரத்து 444 கோடியை வசூலிப்பதற்கு எதிராக, மத்திய அரசு ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருந்தது.
இதனால் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நிலுவையில் உள்ள மாநிலங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசால் செலுத்த முடியாததால் இந்த ஆண்டு நிலைமை மோசமடைந்தது.
அடுத்த இரண்டு-மூன்று நாள்களில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மாநிலங்களுடன் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடன் பெற்று ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டும் - பொருளாதார வல்லுநர்கள்