ETV Bharat / business

'வித்தியாசமாக சிந்தியுங்கள், நரசிம்மனைப் போல செயல்படுங்கள்'- ஆனந்த் மகேந்திரா! - வித்தியாசமாக செயல்படுங்கள்

வித்தியாசமாக சிந்தித்து, நரசிம்மனை போல் செயல்பட வேண்டும் என மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார்.

Think different  act like Narasimhan: Anand Mahindra advise to space sector  business news  Anand Mahindra  space sector  Narasimhan  ஆனந்த் மகேந்திரா  வித்தியாசமாக செயல்படுங்கள்  நரசிம்மனை போல் செயல்படுங்கள்

author img

By

Published : Aug 20, 2020, 10:46 PM IST

ஹைதராபாத்: விண்வெளித் துறையில் இந்தியாவின் திறனைத் அதிகரித்தல்’ குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஏற்பாடு செய்திருந்த காணொலி வாயிலான கருத்தரங்கத்தில் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “புராணங்களில் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக நரசிம்மன் அவதாரம் வருகிறது. இதில் விஷ்ணு பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் தோன்றினார்.

இரணியன் மனிதனாலும், மற்ற உயிரினங்களினாலும், பகலிலும், இரவிலும் கொல்ல முடியாதபடி வரத்தை பெற்றிருந்தார். அவரை எந்த ஆயுதத்தாலும், உயிரினத்தாலும் அழிக்க முடியாது.

அந்த அரக்கனை வெல்ல பகவான் விஷ்ணு வித்தியாசமாக சிந்திக்க வேண்டியிருந்தது. அதன்படி ஒவ்வொருவரும் இலக்கை வெல்வது குறித்து வித்தியாசமாக சிந்தியுங்கள்.

இந்தியா ஒரு ‘விண்வெளி ஆராயும் தேசத்திலிருந்து’ ‘விண்வெளி நோக்கி பயணிக்கும்’ தேசமாக மாற இது சரியான தருணம். இந்தத் துறையில் உள்ள அபரிமிதமான ஆற்றலைக் கொண்டு இதனை விரைந்து செய்யுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவோம்: ஆனந்த் மகேந்திரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.