ETV Bharat / business

’கரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளி குடும்பத்துக்கு மாத சம்பளம் தொடரும்’ - டாடா ஸ்டீல் அறிவிப்பு

கரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு, அவரது 60 வயது பூர்த்தியாகும் காலம் வரை மாத சம்பளம் தொடரும் என டாடா ஸ்டீல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tata Steel
Tata Steel
author img

By

Published : May 25, 2021, 8:20 PM IST

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, குடும்பத்தில் சம்பளதாரர்கள் உயிரிழக்கும் அவலம் ஏற்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் அறிவிப்பு

இந்த மோசமான சூழலில் தனது நிறுவன ஊழியர்களின் குடும்ப நலன் காக்க டாடா ஸ்டீல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனது நிறுவன ஊழியர் கோவிட்-19 தொற்றால் உயிரிழக்கும்பட்சதில் அந்த நபர் கடைசியாக வாங்கிய சம்பளத்தை அவரது குடும்பத்தினருக்கு, அவரின் 60 வயது பூர்த்தியாகும் காலம் வரை மாதம் தோறும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி கோவிட் தொற்றால் உயிரிழந்த நபர்களின் குழந்தைகளுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும்வரை கல்விச் செலவுகள் அனைத்தையும் நிறுவனமே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவுக்கு ட்ரம்ப் சாப்பிட்ட மருந்து, இந்தியாவிலும் விற்பனை: ஒரு டோஸ் விலை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.