ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் வாரியத்தின் தலைவர் பதவியை சுபாஷ் சந்திரா ராஜினாமா செய்தார். எனினும் அவர் நிர்வாகமற்ற இயக்குநராக தொடருவார்.
பங்குதாரர்களின் மாற்றங்களின் அடிப்படையில் சுபாஷ் சந்திரா தனது பதவியை ராஜினாமா ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது விதிமுறை 17 (எல்பி) இன் தேவைகளுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வாரியத்தின் தலைவர் நிர்வாக இயக்குநருடனோ அல்லது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடனோ தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று கட்டளையிடும் செபி பட்டியல் ஒழுங்குமுறைகள்” தெரிவித்துள்ளது.
ஜீ வாரியம் ஆறு இயக்குநர்களை நியமித்தது. அனைத்து நியமனங்களும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எசெல் குழும பிரதிநிதிகளாக சுபாஷ் சந்திரா மற்றும் புனித் கோயங்கா ஆகியோர் ஜீ போர்டில் தொடருவார்கள். சுபாஷ் சந்திராவின் மகன் கோயங்கா, தற்போதைய எம்.டி. மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
இதையும் படிங்க: ' 50 நாட்களுக்குள் நிறுவனத்தின் மதிப்பைச் சமர்ப்பியுங்கள்' - பாரத் பெட்ரோலியத்திற்கு மத்திய அரசு உத்தரவு!