ETV Bharat / business

Stock Market: வியப்பைத் தந்த வியாழன்!

author img

By

Published : Jan 27, 2022, 6:33 PM IST

Stock Market: இன்றைய பங்குச் சந்தையின் இறுதியில், சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 168 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

stock market value on january 27
வியப்பை தந்த வியாழன்

Stock Market: அமெரிக்க மைய வங்கியின் அறிவிப்பு எப்படி இருக்குமோ என்கின்ற ஐயம், இம்மாத முன்பேர வர்த்தகத்தை முடிக்க வேண்டிய கடைசி நாள் என்னவாகுமோ என்பன உள்ளிட்ட கேள்விகள், வியாழக்கிழமை பங்குச்சந்தை நிலவரம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

இன்று வெளியான காலாண்டு முடிவுகள் திருப்தியைத்தர, அமெரிக்க முதலீடுகள் இங்குதான் வரும் என்ற நிபுணர்களின் கருத்து ஒருசேர சந்தைகள் சற்றே நிமிரத்தொடங்கின.

இன்று ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் வாயிலாக டாடா வசம் ஒப்படைக்கப்படும் அரிய தகவலால் மீண்டும் நிமிரத்தொடங்கியது, பங்குச்சந்தை. இருப்பினும் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்கின்ற கலக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 168 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மென்பொருள் கம்பெனிகள் பலத்த சரிவைச் சந்தித்தன. இருப்பினும், வங்கிப்பங்குகள் வீறுகொண்டு எழுந்தன என்றே சொல்ல வேண்டும்.

ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலா மூன்று விழுக்காடு உயர்ந்தும், மாருதி சுசூகி, கோடாக் மஹேந்திரா வங்கி, சிப்லா ஆகியன தலா இரண்டு விழுக்காடு உயர்ந்தும் முடிந்தது.

இதையும் படிங்க: இன்றைய தங்கம் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.