ETV Bharat / business

Stock Market Highlights: செவ்வாய் தந்தது வருவாய்! - பங்குச் சந்தை நிலவரம்

தொடர்ந்து ஐந்து நாள்கள் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன.25) சற்றே உயர்வுடன் காணப்பட்டன.

பங்குச் சந்தை நிலவரம்
Stock Market Highlights
author img

By

Published : Jan 25, 2022, 5:21 PM IST

ஒமைக்ரான் அச்சுறுத்தல் ஓரளவு நீங்கியது, அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்தது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அபுதாபியில் ஏற்பட்ட பிரச்சினை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை தயாராக வைத்திருப்பதாக அறிவித்தது ஆகியன சந்தையில் ஒரு உறுதித்தன்மையை ஏற்படுத்தாமல் வைத்திருக்கின்றன.

அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிதிநிலை கூட்டத்தொடர் ஆகியவற்றால் முதலீட்டாளர்களிடம் காணப்படும் தயக்கம் ஆகியவற்றை இதன் காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், இறக்கத்தை நல்ல வாய்ப்பாக கருதி நல்ல பங்குகளில் சிறிது சிறிதாக மூதலீட்டை தொடரவும் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் மும்பை சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்தும் நிஃப்டி 129 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. அடுத்தநாள் அதாவது வியாழக்கிழமை இம்மாத வர்த்தகத்தை முடிக்க கடைசி நாள் ஆகும்.

மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் கிட்டத்தட்ட ஏழு விழுக்காடும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்துஸ் வங்கி , யூனைடட் பாஸ்பரஸ் பங்குகள் தலா நான்கு விழுக்காடும் உயர்ந்தும் முடிந்தன.

இதையும் படிங்க: இன்றைய தங்கம் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.