மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பிறகு சரிவை சந்தித்த பங்குச்சந்தை விரைவில் எழுச்சிபெற்றது. இந்த நிலையில் சீனா நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக வர்த்தக உலகம் பாதிப்புக்குள்ளானது.
இதனால் இந்திய பங்குச்சந்தை உள்பட உலக பங்குச் சந்தை அனைத்தும் கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் நான்கு நாட்கள் கடும் சரிவுக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,323 என நிறைவுபெற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 133 புள்ளிகள் அதிகரித்து 12,125.90 என வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.
தங்கத்தின் விலை 462 ரூபாய் அதிகரித்து 10 கிராம் தங்கம் 42,339 ரூபாய் ரூபாய் என வர்த்தகமாகியுள்ளது.
இதையும் படிங்க: நாகர்கோவிலில் நடைபெற்ற நகைத் தொழிலாளர்களுக்கான விளக்கக் கூட்டம்!