மும்பை: அயல்நாடுகளில் கரோனோ தொற்று அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் சந்தைகளில் காட்டாத ஆர்வம் காரணமாக உலகப்பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது.
உலகச்சந்தைகளின் போக்கையடுத்து இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு தொடர்ந்தது.
வர்த்தகத்தின் முடிவில் இன்று (ஜன.19) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 656. 04 புள்ளிகள் சரிந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 174.60 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகத்தின் இடையே பட்டியலிடப்பட்ட பங்குகளின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருப்பதாலும் சந்தைகள் சரிவை சந்திக்கின்றன.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே அதேபோல ஒவ்வொன்றாக கடந்து வந்தால்தான் சந்தையில் லாபத்தை பார்க்க முடியும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில் ஓஎன்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹிண்டால்கோ ஆகியன லாபம் தந்தன. மிட்கேப் மென்பொருள் நிறுவனங்கள் குறைந்து முடிந்தன.
இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலை: கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு