வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவுடன் காணப்பட்டது. கடந்த வாரத்தையும் கணக்கில் கொண்டால் தொடர்ந்து ஐந்தாம் நாளாக சரிவைச் சந்தித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
கரோனா தொற்றுப் பரவல், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் பதற்றம் என நிறைய காரணங்களை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட காரணங்கள் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்க நல்ல காலாண்டு முடிவுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,546 புள்ளிகள் குறைந்தும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 468 புள்ளிகள் குறைந்தும் முடிந்தன.
சிப்லா, ஒ.என்.ஜி.சி ஆகிய இரு பங்குகள் மட்டும் லாபத்தோடு காணப்பட்டது.
இதையும் படிங்க: இன்றைய தங்கம் விலை நிலவரம்