மார்ச் மாதத்தின் முதல் நாளான நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ''சிவ சிவ' எனச் சிவனை நோக்கி நல்வழி தரவேண்டும்'' என வேண்டிக்கொண்டிருந்த மக்களுக்கு, உக்கிரம் அடைந்த உக்ரைன் போர், அமெரிக்கச் சந்தைகளில் பலத்த வீழ்ச்சி, கண்ணைக் கட்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு என அதிர்ச்சி மேல் அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தன.
இந்தியப் பங்குச்சந்தைகள்?
கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8 டாலர் அதிகரித்து, 113 டாலராக உயர்ந்து வர்த்தகத்தின் இறுதியில் சற்றே குறைந்து 111.75 டாலர் என முடிந்தது. கடந்த ஜூன் 2014-க்குப்பின் இதுதான் உட்சபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் 1,200 புள்ளிகள் சென்செக்ஸூம் நிஃப்டி 315 புள்ளிகளும் சரிந்தன. பின்னர் சுதாரித்துக்கொண்டு சற்றே உயரத்தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 778 புள்ளிகளும் நிஃப்டி 188 புள்ளிகளும் குறைந்து முடிந்தன.
பெரும் வீழ்ச்சி
உலோகத்துறை, எண்ணெய், இயற்கை வாயு, எரிசக்தி ஆகிய துறைகள் மட்டுமே பரிணமித்தன. வங்கித்துறை, வாகனத்துறையும் பெரும் வீழ்ச்சி கண்டன. இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டைட்டன், ரிலையன்ஸ் நெஸ்ட்லே, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை சற்றே உயர்வுடன் முடிந்தன.
இதையும் படிங்க: பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் விவரத்தை வெளியிட்ட மத்திய நிதியமைச்சகம்