டெல்லி: கடந்த ஐந்து நாள்களாக உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்களான சென்செக்ஸ், நிஃப்டி சற்று வீழ்ச்சியுடன் முடிவடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு காரணம் வேகமாக நகரும் நுகர்வோர் பொருள்களில் (FMCG - Fast Moving consumer goods) விற்பனை அழுத்தம், சில வங்கிப் பங்குகளே ஆகும்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய நாளின் முடிவில் 61,223.03 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது நேற்றைய நாளைவிட 0.02 விழுக்காடு குறைந்து, அதாவது 12.27 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று 61,235.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு இன்றைய நாளின் முடிவில் சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் (புள்ளிகள் குறைந்து) நிறைவடைந்தது. பங்குச்சந்தை முடிவில் டிசிஎஸ் 1.84 விழுக்காடு அதிகரித்து ரூ.3969.25 ஆக இருந்தது. இன்ஃபோசிஸ் 1.64 விழுக்காடு உயர்ந்து ரூ.1928.20 ஆக இருந்தது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி வர்த்தக நாள் முடிவில் 0.011 விழுக்காடு குறைந்து, அதாவது 2.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,255.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதையும் படிங்க: ரூ.1,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ராமானுஜர் சிலை பிப்.5 திறப்பு