ETV Bharat / business

சரிவில் பங்குச்சந்தைகள்... சிறிய முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், நீண்ட கால முதலீட்டார்களுக்கு இது சிறந்த நேரம் என பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜன் தெரிவிக்கிறார்.

Long term investment
Long term investment
author img

By

Published : Mar 10, 2020, 7:44 AM IST

'பங்குச்சந்தைகளில் கடும் சரிவு' என்ற செய்தியை சமீப காலமாக நாம் அடிக்கடி பார்க்கிறோம். சர்வதேச காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் பிரச்னை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதைப் போல அதனை பெரிதாக்கியுள்ளன. கடந்த ஆண்டு, பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடான அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்றது. இரு நாடுகளும் கடுமையாக சண்டைபோட்டுக்கொண்டதால், உலக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

சரிவில் பங்குச்சந்தைகள்... சிறிய முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இதனிடையே இந்திய பொருளாதாரம் தள்ளாடி கொண்டு இருந்தது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்திய பங்குசந்தையில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு ஓரளவிற்கு இந்திய பங்குச்சந்தை மீண்டு வந்த நிலையில், வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறியதுபோல் பங்குச்சந்தை மீண்டும் கடுமையான சரிவில் வர்த்தமாகிவருகிறது. சீன நாட்டில் ஏற்பட்ட தொற்றுநோய் கொரோனா என்றழைக்கப்படும் கோவிட் -19 உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் உயிரியிழந்துள்ளனர். சீன நாட்டுக்கு பயணம் செய்ய அனுமதி தடைசெய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டின் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளும் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கச்சா எண்ணெய் நிறுவனங்களும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. வாகன பயன்பாட்டின் எண்ணிக்கை குறைந்ததால் கச்சா எண்ணெய் தேவையும் குறைந்துள்ளது.

இதனால் வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. முன்னணி நிறுவனமான ப்ரெண்ட், ஒன்பது சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

மேலும் பங்குசந்தையில், கச்சா எண்ணெய் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து பங்குசந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இந்த நேரத்தில், சிறிய முதலீட்டாளர்கள், புதிய முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? சந்தையில் முதலீடு செய்யலாமா? புதிய பங்குகளை வாங்கலாமா? பங்குகளை விற்பனை செய்யலாமா? எந்தப் பங்குகளை வாங்கலாம்? எதனை விற்கலாம்?..

இது போன்ற சிறிய முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜன்.

வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்

பங்குச்சந்தை எப்போதெல்லாம் இறக்கங்களை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அதனை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தற்போது சுமார் 2000 புள்ளிகள் இறக்கத்தில் உள்ளது. இதுபோன்ற நேரத்தில் நீண்ட கால முதலீட்டார்கள் வாங்குவதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள்.

குறுகிய கால முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில நிறுவன பங்குகள் லாபத்தில் இருந்தால் அந்தப் பங்குகளை விற்பனை செய்வது லாபத்தை எடுப்பது ஒரு யுத்தி. இது குறைந்த கால முதலீடுகளுக்கு பொருந்தும்.

நீண்ட கால முதலீடு

நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் வலிமையான பங்குகளை தேர்வு செய்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்க வேண்டும்.

உபரி பணத்தை பகுதிகளாக பிரித்து முதலீடு செய்வது சிறந்தது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஃபார்மா துறை மற்றும் எஃப்எம்சிஜி என்று அழைக்கப்படும் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் துறையில் கவனம் செலுத்தலாம். அதேபோல் தற்போது மதிப்பு குறைந்து வரும், பிற்காலத்தில் வலிமையாக மாற வாய்ப்புள்ள தனியார் வங்கிகளிலும் முதலீடு செய்யலாம்.

நிதித்துறை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் அவற்றை தற்போது வாங்கினால் எதிர்காலத்தில் வலிமையாக மாற வாய்ப்புள்ளது. அமெரிக்காவைச் சார்ந்து இயங்குவதால் தகவல் தொழில்நுட்பத்துறையில் கூட முதலீடு செய்யலாம். அதேபோல் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம்.

பங்குச்சந்தையில் பயமா?

புதிதாக முதலீடு செய்பவர்கள் மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயக்கமிருந்தால் நிஃப்டி ஈடிஃஎப் - இல் நேரடியாக குறியீட்டு எண்ணில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி - இந்தியா எவ்வாறு லாபம் பெறும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.