கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 1,397 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 35 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பொதுமக்கள் நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்குத் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.
டாடா நிறுவனம் சார்பாக 1500 கோடி, இன்போசிஸ் பவுண்டேசன் சார்பாக 100 கோடி, பேடிஎம் நிறுவனம் சார்பாக 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இதனிடேயே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் இரண்டு நாள் ஊதியத்தை பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வங்கியில் 2,56,000 ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இதன் மூலம் 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: 100 கோடி ரூபாய் அளித்த இன்போசிஸ் பவுண்டேசன்