கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவின் உள்நாட்டு சந்தை மற்றும் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இந்த தாக்கம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அயல்நாடுகளில் அதிகம் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களே. அயல்நாட்டில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் தொகை ரெமிட்டன்ஸ் தொகை எனக் குறிப்பிடப்படும். அதன்படி இந்தியாதான் உலகிலேயே அதிகளவில் ரெமிட்டன்ஸ் தொகை பெரும் நாடாக திகழ்கிறது.
இந்நிலையில், கரோனா பாதிப்பின் காரணமாக இந்த ரெமிட்ன்ஸ் தொகை 23 விழுக்காடு வீழ்ச்சியை சந்திக்கும் என உலக வங்கி ஆய்வு கணித்துள்ளது. இந்தியாவின் ரெமிட்டன்ஸ் வருவாய் கடந்தாண்டு 83 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது இந்த தொகை, நடப்பு ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலராக சரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் தொழில்துறை முடங்கியுள்ளதன் காரணமாக, பல நிறுவனம் வேலையிழப்பு, சம்பள குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, வலைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு அங்கு வசிக்கும் இந்தியர்கள் வாழ்வில் நேரடியாக பாதிக்கும் அச்சம் தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உலகின் முன்னணி டிஜிடல் சக்தியாக இந்தியாவை மாற்றுவோம் - அம்பானி நம்பிக்கை