தொலைத் தொடர்புத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் திட்டங்களை வழங்கி வந்தது. ஆனால் சமீபத்தில், ஜியோ டு ஜியோ கால்கள் மட்டுமே இலவசம் என்றும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மற்ற டெலிகாம் நிறுவனங்கள் ஜியோவை கிண்டலடிக்கும் விதமாக விளம்பரங்களை வெளியிட்டு வந்தன. இந்நிலையில் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனம் All in One என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி ரூ. 222 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 28 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவும் ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால்களும் மற்ற நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் கால்களில் ஆயிரம் நிமிடங்கள் வரையும் இலவசமாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 333, ரூ. 444 திட்டங்களுக்கும் இதே சலுகை முறையே 56 மற்றும் 84 நாட்களுக்கு வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.
விலை | வேலிடிட்டி | பயன்கள் |
222 | 28 நாட்கள் | தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால், மற்ற நிறுவனங்களுக்கு 1,000 நிமிடங்கள் இலவசம் |
333 | 56 நாட்கள் | தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால், மற்ற நிறுவனங்களுக்கு 1,000 நிமிடங்கள் இலவசம் |
444 | 84 நாட்கள் | தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால், மற்ற நிறுவனங்களுக்கு 1,000 நிமிடங்கள் இலவசம் |
555 | 84 நாட்கள் | தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால், மற்ற நிறுவனங்களுக்கு 3,000 நிமிடங்கள் இலவசம் |
மேலும் ரூ.555 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 84 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவும் ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் கால்களும் மற்ற நிறுவனங்குக்கு மேற்கொள்ளப்படும் கால்களில் 3,000 நிமிடங்கள் வரையும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் திட்டங்கள் மற்ற நிறுவனங்களின் திட்டங்களைவிட 20 முதல் 50 சதவிகிதம் வரை குறைவாகவே உள்ளதாகவும் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் இந்த அதிரடி கம்பேக் அறிவிப்பால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.
இதையும் படிங்க: அடுத்த லெவலுக்குப் பாய்ந்த சியோமி மொபைல்கள்!