ETV Bharat / business

'ஜிஎஸ்டி வருவாய் மறுப்பு; மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்'- சோனியா காந்தி

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் கிடைத்த வருவாயை மத்திய அரசு நிலுவையில்வைத்திருப்பது மாநில அரசுகளுக்கு செய்யும் துரோகம் என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

GST Sonia Gandhi Congress JEE NEET ஜிஎஸ்டி காங்கிரஸ் கூட்டம் சோனியா காந்தி நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு

author img

By

Published : Aug 26, 2020, 5:37 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுடன் இன்று (ஆக.26) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது, “மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வருமானத்தை நிலுவையில் வைத்து நரேந்திர மோடி அரசாங்கம் துரோகம் இழைக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

இந்த காணொலி சந்திப்பில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளாக நீட் மற்றும் ஜேஇஇ குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்து பேசுகையில், “மத்திய, மாநில அரசின் உறவுகளில் பல சிக்கல்கள் உள்ளன. இதற்கிடையில், அடுத்த மூன்று வாரங்களில் பாராளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பெற தொடர்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஜிஎஸ்டி இழப்பீடு ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின்படி சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது மிக முக்கியமானது.

ஆனால் அது நடக்கவில்லை. நிலுவைத் தொகை குவிந்துள்ளது, இதனால் அனைத்து மாநிலங்களின் நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படுகிறது” என்றார்.

மேலும், கடந்த 11ஆம் தேதியன்று நடந்த நிதி நிலைக்குழுவின் கூட்டத்தில், நடப்பு ஆண்டிற்கான 14 சதவீத கட்டாய இழப்பீட்டை செலுத்தும் நிலையில் மத்திய அரசு இல்லை என்று நிதிச் செயலாளர் தெளிவாகக் கூறினார்.

ஆக, மாநிலத்துக்கு இழப்பீடு வழங்க மறுக்கிறார்கள். இது நரேந்திர மோடி அரசாங்கத்தின் துரோகம்” என்றார்.

மேலும், “கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு எடுத்துக்காட்டு என ஜிஎஸ்டி இயற்றப்பட்டதாகக் கூறினார்கள். இதில் மாநிலங்களுக்கு பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. இதனை முதலில் சரிகட்டும் என்று வாக்குறுதி அளித்த மத்திய அரசு தற்போது இழப்பீடு வழங்க மறுக்கிறது.

மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத ஒருதலைப்பட்ச வரிகளிலிருந்து மத்திய அரசு தொடர்ந்து லாபம் ஈட்டுகிறது” என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னை, தேசிய கல்விக் கொள்ளை, சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீட்டு வரைவு அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது சோனியா காந்தி, “தேசிய கல்விக் கொள்ளை, சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீட்டு வரைவு அறிக்கை ஒரு பச்சை தேசவிரோதம்” என்று கூறினார்.

சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆறு விமான நிலையங்கள் தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரயில்வேயும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அறிவிப்புகள் உண்மையில் ஒரு பின்னடைவு என்பதால் நம்மை மிகவும் கவலையடைய செய்கின்றன.” என்றார்.

இதையும் படிங்க: 'நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு நியாயமற்றது'- கிரேட்டா தன்பெர்க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.