ETV Bharat / business

"எங்கள் திட்டம் இதுதான்" - ரியல்மி சிஇஓ திட்டவட்டம் - ரியல்மி திட்டம்

டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 20 முதல் 25 விழுக்காட்டை கைப்பற்ற வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

Realme CEO Madhav Sheth latest
Realme CEO Madhav Sheth latest
author img

By

Published : Sep 23, 2020, 7:12 AM IST

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ரெட்மி நிறுவனத்திற்குப் போட்டியாக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ரியல்மி. 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் ஒரு அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்நிலையில், ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மாதவ் ஷேத் கூறுகையில், "வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இந்தக் காலச்சூழலில் ஸ்மார்ட்போன்கள் முக்கியமானதாக மாறியுள்ளன. நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருள்களை பண்டிகை காலங்களில்தான் வாங்குவார்கள். வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு ஏற்ப சந்தையில் தற்போது பொருள்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதை குறிவைத்து நாங்கள் புதிய ஸ்மார்ட்போன்களையும் AIOT தயாரிப்புகளையும் விரைவில் வெளியிடவுள்ளோம்.

இந்தியாவில் நம்பர் 1 ஆன்லைன் பிராண்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வரும் பண்டிகை காலத்தில் சுமார் 20 முதல் 25 விழுக்காடு வரையிலான சந்தையை (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையையும் சேர்த்து) கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இந்தாண்டு இறுதிக்குள் 80 லட்சம் AIOT தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த இலக்கை அடைய வரவிருக்கும் பண்டிகை காலம் எங்களுக்கு முக்கியமானது. ஏனென்றால், ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 50 விழுக்காடு விற்பனை இந்தப் பண்டிகை காலங்களில் மட்டுமே நடைபெறும்" என்றார்.

Counterpoint ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் சியோமி (29 விழுக்காடு), சாம்சங் (26 விழுக்காடு), விவோ(17 விழுக்காடு) ஆகிய நிறுவனங்களுக்குப் பின் 11 விழுக்காடு சந்தை இருப்புடன் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாக ரியல்மி உள்ளது.

கரோனா காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறதா என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர்," பண்டிகை கால தேவையைப் பூர்த்தி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்.

ஆனால், பாதுகாப்புதான் எங்கள் முதன்மையான முன்னுரிமை. உற்பத்தியை அதிகரிக்க எங்கள் பணியாளர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் தள்ள முடியாது. பண்டிகை காலத்தை குறிவைத்து நாங்கள் ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கிவிட்டோம். வரும் காலத்தில் தேவையைப் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறோம்" என்றார்.

மேலும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரியல்மி நார்சோ 20 சீரிஸ் பற்றி பேசிய அவர், "மே மாதம் நாங்கள் ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10A ஸ்மார்ட்போன்களை வெளியிட்டோம். அதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவரை 10 லட்சம் நார்சோ ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்த வெற்றிதான் நார்சோ 20 சீரிஸை வெளியிட எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது" என்றார்.

இதையும் படிங்க: ஜஸ்ட் 399 ரூபாயில் தொடங்கும் புதிய 'ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்' திட்டங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.