ETV Bharat / business

3 மாதங்களில் மீள்வோம்.. கிரெடாய் தலைவர் ஸ்ரீதரன் நம்பிக்கை!

கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு முதல் மூன்று மாதங்களிலேயே நிலைத்தன்மை பெற்று நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படும். வீடு வாங்கலாமா? வேண்டாமா? என்ற நுகர்வோரின் குழப்பமான மனநிலை மூன்று மாதங்களில் தீர்ந்துவிடும் என கிரெடாய் தலைவர் ஸ்ரீதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 13, 2020, 10:21 AM IST

Updated : May 15, 2020, 12:56 PM IST

CREDAI Chief Sri Dharan
CREDAI Chief Sri Dharan

கரோனா வைரஸ் நோயால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, புதிய வீடு விற்பனை, மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கோரும் சலுகைகள், வீட்டுக் கடன் உள்ளிட்டவை குறித்து கிரெடாய் (CREDAI) என்று அழைக்கப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீதரன் நமது ஈடிவி பாரத் செய்தியாளருடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு நேர்மறையான எண்ணங்களுடன் அவர் பதிலளித்த விதம் பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

கேள்வி: தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் கட்டட பணிகள் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. அது எப்படி செயல்படுத்தப்படுகிறது?

பதில்: கட்டட பணிகளை மேற்கொள்ள மே 6ஆம் தேதி முதல் அனுமதி தரப்பட்டது. கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் மே 4, 5 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன. 50 விழுக்காடு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இது மேலும் மேம்படும் என நம்பிக்கையாக உள்ளேன்.

கேள்வி: கரோனாவால் பல துறைகள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், ரியல் எஸ்டேட் துறையில் எந்தளவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது?

பதில்: மற்ற துறைகள் போலவே ரியல் எஸ்டேட் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கைத் தொடர்ந்து பணிகள் இத்துறையில்தான் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு மூன்று முதல் ஆறு மாதங்கள்வரை இருக்கும். துறையில் ஏற்பட்டுள்ள முழு தாக்கம் ஆறு மாதங்களுக்கு பிறகே தெரியவரும். பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் கட்டட பணிகள் முடிந்து வீட்டினை கட்டி தந்து விடுவார்கள் என வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். கால தாமதம் செய்யாமல் பணிகளை விரைந்து முடித்து தருவதையே வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்.

கேள்வி: விற்கப்படாத, கட்டட பணிகள் முழுமை பெறாத எத்தனை வீடுகள் சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ளன?

பதில்: கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விற்கப்படாத வீடுகள் சென்னை பெருநகர மாநகராட்சியில் அதிகளவு இருந்தன. ஆனால், அவை அனைத்தும் காலப்போக்கில் விற்கப்பட்டுவிட்டன. கட்டட பணிகள் முழுமையடைந்த அடுக்குமாடி வீடுகளை வாங்க மக்கள் விரும்பினர். அம்மாதிரியான 70 விழுக்காடு வீடுகள் விற்கப்பட்டுவிட்டன. அதுவும் ஒரு சில இடங்களில் மட்டுமே அந்த 30 விழுக்காடு வீடுகள் உள்ளன. விற்கப்படாத வீடுகள் இனி பெரிய விளைவை ஏற்படுத்தாது. அவை கடந்த ஆண்டே விற்கப்பட்டுவிட்டன. இந்தாண்டின், முதல் பாதியான ஏப்ரல் மாதம்வரையிலான காலத்தில், அதிக அளவு வீடுகள் விற்கப்பட்டுவிட்டன. எங்கள் கூட்டமைப்பின் மூலமும் அதிக விற்பனை மேற்கொள்ளப்பட்டது. முழுமை பெறாத கட்டட பணிகள் சில கிடப்பில் உள்ளன. வங்கிகள், பில்டர்கள் அந்தப் பணிகளை முழுமை பெறவைக்கும் வகையில் முயற்சித்துவந்தன. ஊரடங்கு காரணமாக அந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஊரடங்குக்கு பிறகு அந்த பணிகள் தொடர வாய்ப்புள்ளது.

கேள்வி: வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஊதிய குறைப்பு நடவடிக்கையாலும் மக்கள் வீடுகள் வாங்குவதை குறைத்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: தொழிலாளர்கள், முதலாளிகள் என அனைவருக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது நீண்ட காலம் தொடராது. ஊதிய குறைப்பு நடவடிக்கை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தொடர வாய்ப்புள்ளது. பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு முதல் மூன்று மாதங்களிலேயே நிலைத்தன்மை பெற்று நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படும். வீடு வாங்கலாமா? வேண்டாமா? என்ற நுகர்வோரின் குழப்பமான மனநிலை மூன்று மாதங்களில் தீர்ந்துவிடும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் வீடு வாங்குவது அவர்களுக்கு முக்கியமாக தோன்றும். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவர். நான் உள்பட பலர் வீட்டில் பெரும்பாலான நேரத்தை கழித்ததில்லை. ஆனால், இப்போது பெரும்பாலான நேரத்தை வீட்டில் கழிக்கிறேன். என் வாழ்நாளிலேயே நான் இப்படி இருந்ததில்லை. வீட்டின் மீது உள்ள ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அனைத்தும் நாளையே சரியாகிவிடும் என எதிர்பார்க்க முடியாது. நுகர்வோரின் மனநிலை மாறுவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள்வரை ஆகும். ஊதிய குறைப்பு தற்காலிகமானதே, இயல்பான ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும். மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து பிரச்னையும் தீர்ந்துவிடும் என நம்பிக்கை உள்ளது.

கிரெடாய் தலைவர் ஸ்ரீதரன் நம்பிக்கை

கேள்வி: வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருக்கின்றனர். இது கட்டட தொழிலில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? மாற்று திட்டம் உங்களிடம் உள்ளதா?

பதில்: வெளிமாநில தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிய நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. அதில், கிரெடாய் அமைப்பின் சார்பாக நான் உறுப்பினராக உள்ளேன். வெளிமாநில தொழிலாளர்களின் மனநிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என எங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்குவதால், தகுந்த இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றி பணியை மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும் என தெரிவித்தோம். இதனைத் தொடர்ந்து, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. 40 முதல் 50 விழுக்காடு தொழிலாளர்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 50 விழுக்காடு தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றனர். மற்ற தொழிலாளர்கள் பணிபுரிவதை பார்த்து அவர்கள் வேலை செய்தால் நன்று. அப்படி இல்லாமல், 40 முதல் 50 விழுக்காடு தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றால் பணி முடங்கும். கால தாமதம் மூன்றிலிருந்து நான்கைந்து மாதங்களாக அதிகரிக்கும். மாற்று தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது குறித்து ஆராய்வோம்.

கேள்வி: கரோனா வைரஸ் நோயால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக ரியல் எஸ்டேட் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் எம்மாதிரியான சலுகைகள், மானியங்களை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் இணைய கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினோம். எங்கள் பிரச்னைகளை எடுத்துரைத்தோம். கடந்த மூன்று மாத காலமாக பணிகள் நடைபெறாத காரணத்தால் வங்கிகள் வரிவிலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஊதியம் அளித்தாக வேண்டும், இம்மாதிரியான காலத்தில் வரி விதித்தால் அது மேலும் பிரச்னையை உண்டாகும். எனவே, அதில் சில சலுகைகளை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். சாதாரண வீடுகளுக்கு ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியும் மலிவான வீடுகளுக்கு 1 விழுக்காடு ஜிஎஸ்டி வரியும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து விழுக்காடு வரியில் உள்ளீடு கடன் பலன் தற்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே, அது கட்டுமான செலவில் சேர்ந்துவிடும்.

இதுகுறித்து எடுத்துரைத்து உள்ளீடு கடன் பலனை மீண்டும் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். வட்டி விகிதம், தேசிய அளவில் இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் சில தீர்க்கப்படாமல் உள்ளன. கால தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. திட்டத்தை எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும். பத்து நாள்களில் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். தமிழ்நாடு துணை முதலமைச்சரை சந்தித்து எங்கள் குறைகளை எடுத்துரைத்துள்ளோம். கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதி தரவேண்டும். மூல பொருள்கள் கிடைத்தால்தான் பணிகளை மேற்கொள்ள முடியும்.

நுகர்வோருக்கு எந்தளவுக்கு சலுகைகள் அளிக்கிறோமோ அந்தளவுக்கு வீடுகளை வாங்குவர். வீட்டு கடனின் வட்டி விகிதம் தற்போது 0.5 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. அது போதாது. 8.5 முதல் 9.5 விழுக்காடுவரை வரி விதித்தால். இம்மாதிரியான சூழ்நிலையில் வீடு வாங்க எவரும் வரமாட்டார். எனவே, ஓராண்டிற்காவது வரியை 5 விழுக்காடாக குறைத்தால் வீடு வாங்க தயக்கம் காட்டுபவர்கள்கூட வீடு வாங்குவர்.

இந்தியாவிலேயே அதிகப்படியான முத்திரை வரி 11+2 விழுக்காடு வரி தமிழ்நாட்டில்தான் விதிக்கப்படுகிறது. அதனை குறைத்தால்தான் நுகர்வோர் பயனடைவர். இதுகுறித்து மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஒற்றை சாளர முறையை கடைப்பிடிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகிறோம். இதனை மேற்கொண்டால்தான் ஒப்புதல் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். சில சமயங்களில் அடுக்குமாடி கட்டடங்களுக்கான ஒப்புதலை பெற பத்து இடங்களுக்கு சென்றாக வேண்டும். எனவே, அனைத்து ஒப்புதல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த வேண்டும்.

கேள்வி: வீடு வாங்க நினைப்பவர்களுக்கு எம்மாதிரியான சலுகைகளை அளிக்க வேண்டும்? எம்மாதிரியான புது திட்டங்களை வகுக்க வேண்டும்? வீட்டு கடன் தருவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே? எனவே, இதற்கு எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

பதில்: புரமோட்டர்கள் சென்றால் வீட்டுக் கடன் தருவதில்லை. ஆனால், நுகர்வோர் சென்றால் அனைத்து வங்கிகளும் வீட்டுக்கடன் தர தயாராக உள்ளன. வருமானம் போன்றவை சரி பார்த்த பின் வங்கிகள் கடன் தர தயாராக உள்ளன. அதில், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். இஎம்ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நுகர்வோர் பயனடைவர் என தெரிவித்துள்ளோம்.

இதையும் படிங்க: சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தை!

Last Updated : May 15, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.