கரோனா காலத்தில் பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பேரிடி ஏற்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டன.
அதன்படி, இறுதியாக ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் முறையே 4 விழுக்காடு மற்றும் 3.35 விழுக்காடாக இருந்தது.
இந்த நிலையில், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவிக்கையில், ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் மாற்றமில்லாமல் அப்படியே தொடரும் என்றார்.
மேலும், 2021-22 காலகட்டத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10.5 விழுக்காடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சொன்ன சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.