கரோனா பரவலால் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி ஒரு புறம் செல்ல, மற்றொரு புறம் வேலையின்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த நிலைமை தான் நீடிக்கிறது என சொல்லவேண்டும். இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் "கரோனா வைரஸ் தோற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு வேலையின்மை அதிகம் என தெரியவந்துள்ளது".
கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் மிகவும் பலவீனமான, அழுத்தமான மனநிலையில் இருக்கிறார்கள். எனவே அவர்களால் ஒரு வேளையில் முழுக்கவனத்தையும் செலுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ள சிரமப்படுகிறார்கள்.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களில் மூன்றில் ஒரு ஒருவர் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: உணவு, தின்பண்டங்களில் மக்கள் நாட்டம்: ஆய்வில் ருசிகர தகவல்!