டெல்லி: இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் பாதிப்பு, உயிரிழப்பு பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
பலரும் சிகிக்சைக்கான செலவை எதிர்கொள்ள முடியாமல் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டனர். இதை போக்கும் விதமாக பொதுத்துறை வங்கிகள் கரோனா சிகிச்சை கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றன.
பாரத ஸ்டேட் வங்கி கரோனா கவச் என்ற திட்டத்தின் கீழ் இந்த கடனை வழங்குகிறது. வங்கிகள், கடன் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப வட்டி விகிதம், செலுத்தும் அவகசாம் மாறுபடும்.
இதையும் படிங்க: மாஸ்டர் கார்டுகளுக்கு தடை- ரிசர்வ் வங்கி